முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா திடீரென மாற்றப்பட்டுள்ளது.
அவருக்கு முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்த நிதித்துறை, தற்போது மரிய வில்சனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் இலாகா மாற்றம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
நிதித்துறையைக் கவனிப்பதாக இருந்தால் முழுமையாகச் சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும் என்றும், வருவாய்த்துறை மூலமாகவே அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் உருவாக்கி, மக்களோடு மக்களாக நேரடியாக இருந்து பணியாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது இந்த விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் மனத திறந்து நேரில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே, இந்தத் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
