வெளியே செல்லும்போது மறக்காமல் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்..! – பிரதமர் மோடி முக்கிய அறிவுரை..!

Estimated read time 1 min read

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகிக்கும் கத்தரி வெயில் நம் அனைவருக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், வெளியே செல்லும்போது மறக்காமல் குடிநீரை உடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த அக்னி வெயில் காலத்தில் தாகத்தோடு தவிப்பவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு ஒரு குவளை தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றும், இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாம் காட்டும் சிறிய கருணை உள்ளம் கூட பிறருக்குப் பேருதவியாக அமையும் என்றும் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author