தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை அடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வர இருப்பதாகவும், ஜூன் 8-ம் தேதி அவர் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாகி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூன் 8-ம் தேதி வருகிறார். அவர் தென்மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதுரை ஒத்தக்கடையில் இந்த ஆலோசனை நடைபெறும் என்றும், நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல் படி நடக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு அமித்ஷா வருவதை அடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.