மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் செல்பவர்களுக்கு இது உதவும். அதாவது, மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி இயங்காது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவததும் யுடிஎஸ் செயலியை நிறுத்தப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1 முதல் முன்பதிவு நிறுத்தப்படும் நிலையில், டிக்கெட்டுகளை பெற முடியாது.
இதற்கு பதிலாக ரயில் ஒன் செயலியை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், விரைவு ரயில் டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒரே செயலி மூலம் நீங்கள் பல சேவைகளுக்கு பயன்படுத்தலாம். ரயில் ஒன் செயலியை ஐஆர்சிடிசி சான்று மற்றும் யுடிஎஸ் பாஸ்வோர்டு மூலம் நீங்கள் ரயில் ஒன் செயலியை லாகின் செய்து கொள்ளலாம்.
ரயில் ஒன் செயலியை இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பல சேவைகளுக்கு ஒரே செயலியை பயன்படுத்த இந்த செயலி உதவும்.
ரயில் ஒன் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வாங்கலாம், நேரடி ரயில் இயக்க நிலையைச் சரிபார்க்கலாம், பெட்டி நிலை விவரங்களைப் பார்க்கலாம், PNR நிலையைக் கண்காணிக்கலாம் மற்றும் உணவு-ஆன்-ட்ராக் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.
மேலும், டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ரயில் ஒன் செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 3 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை 2026 ஜூலை வரை அமலில் இருக்கும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மாற்றங்களால் அடுத்த சில நாட்களில் [மேலும்…]
எஸ்டோனியாவின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற யுல்லே மாடிசே அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 12ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். [மேலும்…]
உலகளவில் நகரமயமாக்கப் போக்கு தொடர்ச்சியாக முன்னேற்றப்பட்டு வருவதுடன், அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை, பல்வகை தேவைகள், பொது வள ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள், [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் துணை தலைமையமைச்சருமான ஹெ லீஃபெங், 12ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் ஆப்பிள் [மேலும்…]
“2026 உலக நகராட்சித் தலைவர்கள் உரையாடல்-லோயாங்”எனும் நிகழ்வு, அக்டோபர் 9 முதல் 11ஆம் நாள் வரை, சீனாவின் ஹேநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெற்றது. [மேலும்…]
சீன வணிக துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹே யா தோங் 12ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனாவின் நீர்வள வலையமைப்பு வளர்ச்சிக்கு தேவையான முதலீடு 6 லட்சம் கோடி யுவானைத் தாண்டும் என்று சீன நீர்வள அமைச்சகத்திலிருந்து [மேலும்…]