வேண்டா வெறுப்பாக எழுதிய வாலி.. பாட்டுக்கு தேசிய விருது கிடைத்த பின்னணி.‌. கமல் சொன்ன ரகசியம்..!! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்தவர் கவிஞர் வாலி. கடந்த 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து, சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இந்தப் படத்தில் வரும் ஒரு காதல் தோல்வி காட்சிக்காக வாலி முதலில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

ஆனால், அந்தப் பாடல் தனக்குப் பிடிக்கவில்லை என்று இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் நேரடியாகக் கூறி நிராகரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வாலி, “என்னால் இதற்கு மேல் எழுத முடியாது, வேறு யாரையாவது வைத்து எழுதிக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
அப்போது தலையிட்ட கமல்ஹாசன், “இல்லை, நீங்கள் தான் இந்தப் பாடலை எழுத வேண்டும்” என்று வாலியிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல், வாலி வேண்டா வெறுப்பாக அமர்ந்து எழுதிய பாடல் தான் “உன்னை நினைத்தேன் பாட்டு படிச்சேன் தங்கமே தங்கம்” என்ற புகழ்பெற்ற பாடலாகும். கடுப்பில் எழுதிய அந்தப் பாடலுக்குத்தான் பின்னாளில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது என்ற சுவாரசியமான தகவலை நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author