நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “கருப்பு” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த ஆக்ஷன்-டிராமா படத்தில் சூர்யா ஒரு வக்கீலாக நடித்துள்ளார்.
படத்தின் கதை என்னவென்றும், கதையின் மையம் என்னவென்றும் படக்குழு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
எனினும், டீசரை பார்க்கும்போது சட்ட போராட்டம் மற்றும் டார்க் ஆக்ஷன் சினிமா என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, இந்த படத்தில் தனது உண்மையான பெயரான “சரவணன்” என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு; டீசர் வெளியீடு
