2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை, மொத்தம் 2 கோடியே 92 இலட்சத்து 18 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சீனாவில் நுழைந்தனர்.
இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 86.2 விழுக்காடு அதிகமாகும். அவர்களில் மொத்தம் 1 கோடியே 74 இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் விசா இன்றி நுழைவு கொள்கையின் மூலம் சீனாவில் நுழைந்தனர்.
இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 123.3 விழுக்காடு அதிகமாகும். குறிப்பாக, இவ்வாண்டு முதல், சீனாவைக் கடந்து வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் விசா இன்றி சீனாவில் 72 அல்லது 144 மணி நேரத்தில் தாங்கலாம் என்ற கொள்கை வரவேற்கத்தக்கது.
இந்தக் கொள்கையைப் பயன்படுத்தும் சீனாவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 132.9 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.