சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட செர்பிய அரசுத் தலைவர் அலெக்சாண்டர் வுசிசுடன் 25ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை இடைவிடாமல் ஆழமாக்கி, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொதுச் சமூகத்தை உருவாக்குவதை தொடர்ச்சியாக முன்னேற்ற அவர்கள் ஒருமனதாக ஒப்புகொண்டனர். இது, சீன-செர்பிய ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்குப் புதிய உந்து சக்தியை ஊட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது, சீன-செர்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு புதிய உயரத்திற்கு முன்னேற்றுவது என்பது தத்தமது வளர்ச்சிக்கான உள்தேவையாகவும், சிக்கலான சர்வதேச நிலைமையில் இன்றியமையாத தேர்வாகவும் ஆகும். பல சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளில் இரு நாடுகள் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
பரந்த உலகளாவிய பார்வையுடன், சீனாவும் செர்பியாவும் அமைதி வளர்ச்சி மற்றும் நியாயத்தை நிலைநிறுத்துவதில் ஆழமான புரிந்துணர்வைக் கொண்டுள்ளன. சர்வதேச விவகாரங்களில் இரு தரப்பும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது உலக நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குத் துணை புரியும்.
4 உலக முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதைக் கூட்டாக முன்னேற்றுவது பற்றி இரு தரப்பும் இப்பயணத்தின் போது கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இது பற்றி செர்பிய நாடாளுமன்றத் தலைவரின் ஆலோசகர் ஸ்டோஜனோவிச் கூறுகையில், இரு நாட்டுறவு ஏற்படுத்தும் நலன் நாளுக்கு நாள் சிக்கலாக மாறும் சர்வதேச சூழலில் பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு முன்மாதிரியை வழங்கியுள்ளது. உலக நிர்வாக பயனுக்கும் பங்காற்றியுள்ளது என்று கூறினார்.
