சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் அக்டோபர் 30ஆம் நாள், தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சீன-அமெரிக்க உறவுக்கான நெடுநோக்குத் தன்மை வாய்ந்த பிரச்சினைகள், பொது அக்கறை கொண்ட முக்கியப் பிரச்சினைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீன-அமெரிக்க உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டினார். 1 மணி 40 நிமிடங்கள் நீடித்த சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பானது மைல்கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளன. சீன-அமெரிக்க உறவு, உலகளவில் மிக முக்கியமான இரு தரப்புறவுகளில் ஒன்றாகும். சீன-அமெரிக்க உறவின் சீரான, நிதானமான, சொடர்ச்சியான வளர்ச்சி, இரு நாடுகளின் பொது நலன்கள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன-அமெரிக்க உறவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தூதாண்மை தொடர்பு ஈடு இணையற்ற நெடுநோக்கு வழிகாட்டலை வழங்கியுள்ளது. இவ்வாண்டு முதல் தற்போது வரை, இரு நாட்டு அரசுத் தலைவர்களும் 3 முறை தொலைபேசி வழியிலும், பலமுறை கடிதங்கள் மூலமும் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர். இத்தொடர்பானது சீன-அமெரிக்க உறவின் ஒட்டுமொத்த நிதானத்திற்குக் கூட்டாக வழிகாட்டியுள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இரு நாட்டு அரசுத் தலைவர்களின் இப்பேச்சுவார்த்தையானது, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் 2வது பதவிக்காலத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற முதல் சந்திப்பாகவும் உலகளவில் அதிகக் கவனத்தை ஈர்த்த சந்திப்பாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                