சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மத்திய ஆசியாவின் மூன்று நாடுகளில் பயணம் மேற்கொண்டப் பிறகு, ஜப்பானிய தலைமையமைச்சர் சீனாவின் மைய நலன்களை வெளிப்படையாகச் சீர்குலைத்து, இரண்டாவது உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை அச்சுறுத்தும் வகையில் பரப்பிய தவறான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தார். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஜப்பானிய தலைமையமைச்சரின் ஆக்கிரமூட்டும் வகையிலான செயல்களைச் சீனா உறுதியுடன் எதிர்ப்பதை இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் ஆதரிக்கின்றனர்.
அண்மையில், ஜப்பானிய தலைமையமைச்சரின் ஆக்கிரமூட்டும் கருத்திற்கு, சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில், ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தில் அசைக்கப்பட முடியாத பொது கருத்தாகும் என்று 86.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இரண்டாவது உலக போரில் தோல்வியடைந்த நாட்டின் சர்வதேச கடமைகளை ஜப்பான் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும் என்று 90.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தைவான் விவகாரம், சீனாவின் மைய நலன்களிலுள்ள முக்கிய பகுதியாகும். தைவான் விவகாரத்தில் சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டுக்கு 89.4 விழுக்காட்டினர் தெளிவாக ஆதரவளிக்கின்றனர்.
