சியோன் ஆன் புதிய மண்டலத்தில் அமைந்துள்ள நாணய மையம் எனும் முக்கிய பகுதியுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நாணய மையத் திட்டப்பணியின் மொத்த கட்டிடப் பரப்பளவு 7 இலட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டராகும். இதில் அலுவலகம், மாளிகை, வணிக வளாகம், போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் அடக்கம். இவ்வாண்டின் முற்பாதியில், இம்மண்டலத்தில் முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.5 விழுக்காட்டு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு சார் தொழில் நிறுவனங்களின் 300க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இம்மண்டலத்தில் நிறுவப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கின் தலைநகர சாரா செயல்பாடுகளின் இடம்மாற்றமான இப்புதிய மண்டலம்,
தற்போது, மாபெரும் திட்டப்பணிகளை முன்னேற்றி, தலைநகர சாரா செயல்பாட்டுப் பங்காற்றும் முக்கிய காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.