இந்திய ரயில்வேயின் புதிய 1.5 மடங்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!! 

Estimated read time 1 min read

ரயில் பயணம் என்பது அனைவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது எவ்வளவு உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தெற்கு ரெயில்வே தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘குறைவான லக்கேஜ்; நிறைவான பயணம்’ என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒவ்வொரு வகுப்பு பெட்டிக்கும் உள்ள இலவச லக்கேஜ் வரம்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் ஏ.சி. வகுப்பில் 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் 50 கிலோ வரையிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டியில் 35 கிலோ வரையிலும் பயணிகள் தங்களது உடைமைகளை இலவசமாகக் கொண்டு செல்லலாம்.

<a href=”http://

“>

இந்த இலவச வரம்பைத் தாண்டி, பயணிகள் கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை விதிமுறைகளுக்கு உட்பட்டு உடைமைகளை எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு. இதற்குச் சாதாரண உடைமைக் கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்; இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படும் உடைமைகளுக்கு அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது.

ஆனால், இந்த கூடுதல் அனுமதி வரம்பையும் தாண்டி, முன்பதிவு செய்யாமல் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் சென்றால், இந்திய ரெயில்வே விதிகளின்படி கடுமையான அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களது லக்கேஜ்களை அளவோடு பேக் செய்து, அபராதத்தைத் தவிர்த்து மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author