தென்னாப்பிரிக்காவில் வசந்தகாலத்தில் சீனா என்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமம் நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 17ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்றது.

இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங் காணொளியின் மூலம் உரைநிகழ்த்தினார்.

கேப் டவுன்னுக்கான சீனத் துணை நிலை தூதர் ரென்ஃபாஜியாங், தென்னாப்பிரிக்க மாநில அரசவையின் துணைத் தலைவர் ரைஸ், மேற்கு கேப் டவுன் நாடாளுமன்றத்தின் தலைவர் மிஷோல், தென்னாப்பிரிக்க சர்வதேச உறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு விவகாரப் பிரிவின் தற்காலிக துணைத் தலைவர் டைவித் முதலிய விருந்தினர்களும் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். இந்நிகழ்வில் அந்நாட்டின் அரசியல், கல்வி, செய்திஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.

சீன ஊடகக் குழுமத்தின்(சி.எம்.ஜி) தலைவரான ஷென் ஹாய்சியோங் காணொளி வழியிலான தன்னுடைய உரையில், உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு நிலைமையை உயர்த்தி, உலகச் சந்தையை சீனா விரிவாக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியதையும், இதன் மூலம் வெளிநாட்டுத் திறப்புக்கான மன உறுதி மீண்டும் வெளிகாட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளவில் முன்னணியில் உள்ள சி.எம்.ஜி, அறிவியல் தொழில் நுட்பம், செய்திஊடகம் உள்ளிட்ட மேம்பாடுகளைப் பயன்படுத்தி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தைக் கொண்டு உலகத்திற்கு நன்மை தர பாடுபடும் எனக் குறிப்பிட்ட அவர், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியுடன் இணைந்து, மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்குவதற்கு பங்காற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author