பிலிப்பைன்ஸ் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ சீனா பற்றி பல முறை தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது, சீனாவின் இயல்பான நலன்களுக்கும் இரு தரப்புறவுக்கும் தீங்கு விளைவித்துள்ளது. சீன நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் முதலிவற்றைப் பேணிக்காக்கும் வகையில், கில்பெர்டோ தியோடோரோ மற்றும் அவரது மனைவியும் பிள்ளைகளும், சீனாவின் பெருநிலப்பகுதி, ஹாங்காங் மற்றும் மக்கௌவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவின் உள்நாட்டு அமைப்புகள், தனிநபர்கள், அவர்களுடன் வர்த்தகம், ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிகளைப் பெற முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர் 11ஆம் நாள் தெரிவித்தார்.
