தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வெர்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் ஸ்ரீதர் போடுபள்ளி ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்தப் பிளேடுகள் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மொட்டையடிக்க ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். பிளேடுகள் திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்ரீதர் போடுபள்ளி, நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.
கல்யாணகட்டாவில் பக்தர்களின் தலைமுடியை சேகரிக்க இந்த அரை பிளேடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
