ஜப்பான் அமைதி வாக்குறுதியைப் பின்பற்ற வேண்டும்:சீனா

 

ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 26ம் நாள் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், ஜப்பான் அரசு, இராணுவச் செலவை அதிகரித்து, பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதியைத் தளர்த்தி, இராணுவப் பயிற்சியில் அடிக்கடி பங்கேற்று, அமைதி அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்தி வரும் செயல்கள், தாக்குதலற்ற தற்காப்பு கொள்கையில் ஊன்றி நின்று வரும் செயல்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஜப்பானிய இராணுவ வெறி, உலகிற்கும் ஜப்பான் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான், வரலாற்றின் படிப்பினையைக் கற்று கொண்டு, அமைதிக்கான வாக்குறுதியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author