பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அண்மையில் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த சந்திப்பு உலக அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மோடி-டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை!
