தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!  

Estimated read time 0 min read

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜூன் 13 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், மாலை நேரங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author