சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் ஜூன் 9ஆம் நாள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியை அனுப்பினர். அதோடு, இரு நாட்டுறவை பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்துவதாக இரு தலைவர்களும் கூட்டாக நிர்ணயித்துள்ளனர்.
அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தபோது ஜார்ஜியா நாடாளுமன்றத் தலைவர் பாபுவாஷ்விலி கூறும்போது,
ஜார்ஜியாவும் சீனாவும் இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டளியுறவை நிறுவி, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து, ஒன்றுக்கொன்று இல்லாத கொள்கையைச் செயல்படுத்தி வருகின்றன. இவை, இரு தரப்புறவுகளில் சமீப ஆண்டுகளில் படைத்த சாதனைகள் ஆகும் என்றார். தற்போது இப்பிராந்தியத்தில் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களைக் கையொழுத்திட்டுள்ள ஒரேயொரு நாடாக ஜார்ஜியா திகழ்கின்றது. இது, ஜார்ஜியா பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல, ஜார்ஜியா மீதான கூடுதல் ஈர்ப்பாற்றலை அதிகரிக்க வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவிர, எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் எட்டப்பட வேண்டிய இலக்குகளைத் தெளிவாக வரையறுத்து, ஒவ்வொரு கட்டத்திலும் எட்டப்பட வேண்டிய கட்டுமான விளைவுகளையும் நிர்ணயிக்கும் ஒரு நீண்டகாலத் திட்டமிடல் முறையை சீனா முன்மொழிகிறது. இது, சீனப் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சி சாதனை படைப்பதை முன்னேற்றுவித்துள்ளது என்று நம்புகின்றேன் என்றார். இத்துறையில் ஜார்ஜியாவுக்கு சீனா ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றது. கடந்த 5、6ஆண்டுகளில், ஜார்ஜியா இது மாதிரியாக செயல்பட்டு, விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
