ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Estimated read time 0 min read

ஈரான் மீது நடத்தவிருந்த மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும், அது ஒரு மிகப்பெரிய தாக்குதலாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.

ஆனால், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டதாகவும், நட்பு நாடுகளின் கோரிக்கையை யோசித்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் சாத்தியம் ஏற்படும் என நட்பு நாடுகள் கருதுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க தயாராக உள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author