சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள “Chennai One” மொபைல் செயலி இன்று (செப்டம்பர் 22, 2025) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்தச் செயலியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து செயலியான இது, மக்களின் பயண அனுபவத்தை முழுவதுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MTC-யின் சுமார் 6,000 பேருந்து நிறுத்தங்கள், 650 வழித்தடங்கள் மற்றும் 3,500 பேருந்துகள் பற்றிய துல்லியமான தகவல்களுடன் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 47 லட்சம் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சென்னையில், இந்த ஒருங்கிணைந்த செயலி பயணத்தை மிகவும் எளிதாக்கும் என CUMTA நம்புகிறது.
சென்னையின் பயணப் புரட்சி: ‘சென்னை ஒன்’ செயலி இன்று அறிமுகம்!
