காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வலியுறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு தாக்கல் செய்டுள்ளது.
காவிரி நீரிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடகா தவறாமல் அமல்படுத்த வேண்டும் எனவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகா மதிக்கவில்லை, காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டப்படி 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட திமுக வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
