சாரல் திருவிழாவை ஒட்டி குற்றால அருவிகளில் நடத்தப்பட்ட லேசர் லைட் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தளமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் சாரல் திருவிழா தொடங்கியது. இதனையொட்டி மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் லேசர் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அருவிகளில் பல்வேறு வண்ணங்களில் தண்ணீர் பாய்ந்து சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அத்துடன் தேசிய கொடி நிறத்தில் அருவியில் இருந்து தண்ணீர் கொட்டியதை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.