வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதி மூலம் 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
வெள்ளச் சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய அமைச்சகங்களின் இடை அமைச்சக குழுக்கள் ஏற்கனவே அருணாசலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அசாமில் வெள்ளப் பாதிப்பு கடுமையாக இருப்பதால், அங்கு இரண்டு முறை ஆய்வுக் குழுக்கள் சென்றுள்ளன. நாகாலாந்து அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த மாநிலத்திற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளது.
