எந்தக் கட்சிக்கும் ரஜினியின் பெயர், புகைப்படம் கூடாது…ரசிகர் மன்றத்தின் அதிரடி உத்தரவு!

Estimated read time 0 min read

சென்னை : தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் புதிய பரபரப்பைக் கிளப்பும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ, அவரது புகைப்படங்களையோ எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைமை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் மற்றும் கட்சித் தொடங்குகளின் பின்னணியில், ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்கள் சில அமைப்புகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அன்பு தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஜினிகாந்தின் உண்மையான தொண்டர்களும், ரசிகர்களும் இதுபோன்ற எந்தவொரு மாற்று அமைப்புகளின் விளம்பரப் பிரசாரங்களிலோ அல்லது அரசியல் நகர்வுகளிலோ தங்களது அடையாளங்களை விற்க வேண்டாம் என்றும், தலைமை மன்றத்தின் வழிகாட்டுதல்களை மட்டுமே முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த அறிக்கையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களில் பல்வேறு புதிய கூட்டணிகளும், கட்சிப் பரவல்களும் தீவிரமடைந்து வரும் இந்தச் சூழ்நிலையில், ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள இந்த திடீர் அறிக்கை சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

You May Also Like

More From Author