“கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது”- திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

Estimated read time 1 min read

கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சென்னை சிந்தாரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை, VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முகவரி அட்டை புதிதாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது” என்றார்.

You May Also Like

More From Author