சீன தேசிய திரைப்பட பணியகத்தின் தலைமையில், சீன ஊடகக் குழுமமும், ஷாங்ஹாய் நகராட்சியும் கூட்டாக நடத்தும் 28ஆவது ஷாங்ஹாய் சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழா ஷாங்ஹாய் பெரும் நாடக அரங்கில் நடைபெற்றது. ஷாங்ஹாய் நகராட்சி துணை தலைவர் லூ ஷன் இத்திரைப்பட விழா துவங்கியது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சீன ஊடகக் குழுமத்தின் துணைத் தலைவர் யூ ச்சுன்ஷெங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.
உலகில் 125 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 4100 திரைப்படங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டன. உலகின் மிக உயர்வான பதிவை இது உருவாக்கியுள்ளது.
