ஆகஸ்ட் 19ஆம் நாள் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதுதில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியெங்ஜின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வருவதையும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் மிகவும் எதிர்பார்ப்பதாகச் சந்திப்பின் போது மோடி தெரிவித்தார். இவ்வாண்டு இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும்.
இந்தியாவும் சீனாவும் கூட்டாளி நாடுகளாகும். வளர்ச்சியை விரைவுபடுத்தும் கடமையைக் கூட்டாக எதிர்கொண்டுள்ள இரு தரப்பும் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும்.
இந்திய-சீன ஒத்துழைப்பின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் அருமையான எதிர்காலத்தை உலகத்துக்கும் காட்ட வேண்டும் என்று மோடி கூறினார்.
தற்போதைய சர்வதேச நிலைமையில், சீன-இந்திய உறவின் நெடுநோக்கு முக்கியத்துவமும் இரு தரப்பின் ஒத்துழைப்பின் நெடுநோக்கு மதிப்பும் பெரும் முனைப்புடன் காணப்பட்டுள்ளன.
இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி சீன-இந்திய உறவின் சீரான நிலையான வளர்ச்சியை முன்னேற்ற பாடுபடுவோம் என்று வாய்ஙீ கூறினார்.