2025ஆம் ஆண்டிற்கான சீனப் பொருளாதாரத்தின் சாதனை, கடுங்குளிர் போன்ற பாதகமான நிலையிலுள்ள உலகப் பொருளாதாரத்திற்கு வெப்பம் போன்ற வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலக இணைய பயனர்களிடையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி சிந்தனை, உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கை வழிநடத்துவதாக 82.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், சீனாவிலுள்ள மிகப்பெரிய சந்தையின் தொடர்ச்சியான விரிவாக்கம் பல்வேறு நாடுகளுக்கு மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்று 86.6 விழுக்காட்டினர் கூறினர். 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்நிலை திறப்புக்காக முன்வைக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள், சீனா எப்போதுமே பொருளாதாரத்தின் உலகமயமாக்கலுக்கான உறுதியான ஆதரவாளராகவும் பலதரப்புவாதத்துக்கான உறுதியான காவலராகவும் இருப்பதை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது என்று 83.6 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலக புவியமைவு சார் அரசியல் மற்றும் பொருளாதார இடர்கள் தீவிரமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சீனாவின் பொருளாதாரச் சாதனை இப்பின்னணியில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வரி உயர்வை ஆயுதமாகப் பயன்படுத்தும் அமெரிக்கா, சொந்த வளர்ச்சியையும் உலகப் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் இடர் மூலமாக மாறியுள்ளது என்று 93.2 விழுக்காட்டினர் விமர்சித்தனர்.
உலகப் பொருளாதார மன்றம், உரையாடலின் எழுச்சி என்பதை தனது 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் கருப்பொருளாக நிர்ணயித்து, பல்வேறு நாடுகளும் உரையாடலின் மூலம் உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் கட்டமைப்பு சார் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, பலதரப்பு வர்த்தக அமைப்பை பேணிக்காத்து வலுப்படுத்துவது, அனைவருக்கும் நன்மை தரும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை முன்னேற்றுவது ஆகிய துறைகளில் உலகளாவிய தெற்கு நாடுகள் மேலும் பெரும் பங்காற்றி வருகின்றன என்று 84.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
