சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 திங்கள்காலத்தில், சீனத் தேசியளவில் இருப்புப் பாதை மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு 167 கோடி டன்னை எட்டியுள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 300 சரக்கு ரெயில்கள் இயங்கப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை 2.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதில் மே திங்கள் 2ஆம் நாளில் மட்டும், 2 இலட்சத்து 2 ஆயிரத்து 400 சரக்கு ரெயில்கள் இயங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
முக்கிய சரக்கு பொருட்களின் போக்குவரத்து வலிமையாக உறுதிப்படுத்தப்பட்டது. மே திங்களில், வேளாண் உற்பத்தி சாதனம், மக்கள் வாழ்க்கை உத்தரவாத பொருட்கள், போக்குவரத்துக்கு உத்தரவாத பொருட்கள் முதலியவற்றின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. பல பிரதேசங்களில் ரெயில் வாரியங்கள், வேளாண் உற்பத்தி சாதனம் உள்ளிட்டவற்றின் வேகமான போக்குவரத்துக்கு பசுமைவழித் திட்டத்தைச் செயல்பட்டுள்ளன.
அதே வேளையில், மின்சார உற்பத்தி நிலக்கரி வினியோகம் உத்தரவாதம் செய்யப்பட்டது. இவ்வாண்டின் முதல் 5 திங்களில், தேசியளவில் 87 கோடி டன் நிலக்கரி ஏற்றியிறக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்த மின்சார உற்பத்தி நிலக்கரி அளவில் இது மூன்றில் இரண்டு பங்கை வகிக்கிறது.
