சிந்து நதி நீர் பஞ்சாயத்து:இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்கப் போவதாக பாகிஸ்தான் மிரட்டல்  

Estimated read time 0 min read

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியா அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் ஏஆர்ஒய் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் க்வாஜா ஆசிஃப், “தண்ணீர் என்பது எங்களது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நாங்கள் உணரும் கணமே, நாங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை இந்தியா அதிவேகமாக கட்டுப்படுத்த முயல்வதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author