அரக்கோணம் ரயில் நிலையத்தில் கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பல்வேறு விரைவில் மின்சாரர்கள் நடுவழியை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரக்கோணம் ஆறாவது நடைமேடை ரயில் நிலையத்திலிருந்து வாலாஜா நோக்கி சென்ற கார்களை ஏற்றி செல்லக்கூடிய சரக்கு ரயிலானது திடீரென்று அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்ற 300 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
27 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பெட்டியில் இன்ஜினியிலிருந்து முதலாவது இரண்டாவது மூன்றாவது ஆகிய மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதன் காரணமாக சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூர் செல்லக்கூடிய திருவனந்தபுரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து ஹூப்ளி செல்லக்கூடிய ஹூப்ளி விரைவில் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் மற்றும் சென்னையில் அரக்கோணம் வரை வரக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனால் ரயில் பயணங்கள் கடும் இன்னலுக்குள் ஆளாகினர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தடம் புரண்ட பெட்டிகளை தவிர்த்து மீதி இருக்க பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிறப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட இந்த மூன்று பெட்டிகளை சீரமைக்க பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணிகளால் இருந்து ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்கு தொடரும் என்பதால் ரயில் போக்குவரத்தை மாற்று வழி பாதையில் தற்காலிகமாக தெற்கு ரயில்வே ஆனது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரயில் தடம் புரண்ட இடத்தில் முழுமையாக 8 மணி அளவில் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து சீர் அமையும் என தெற்கு ரயில்வே திறப்பு தகவல் ஆனது தெரிவிக்கப்பட்டுள்ளது.