உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
நெஸ்லேவின் இந்த செயல், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுவிஸ் கண்காணிப்புக் குழுவான பப்ளிக் ஐ, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, நெஸ்லேவின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியது.
ஆய்விற்கு பின்னர் இந்த அதிர்ச்சி தகவல் கண்டறியப்பட்டுள்ளது.