மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Estimated read time 0 min read

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3ஆம் நாள் நிகழ்வின்போது முதலமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் முகம்மது பர்வேஷ் 110 விதியின் கீழ் விளக்கம் அளித்தார். அமைச்சர் பேசுவதற்கு முன்பு தங்களை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

சபாநாயகர் பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியும் ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்காத சபாநாயகரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

You May Also Like

More From Author