சீனாவின் பல்வேறு நகரப்புறங்களில் தடையற்ற வசதிகளின் கட்டுமான நிலையை உயர்த்தி, பாதுகாப்பான, வசதியான மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த வாழ்க்கை சூழல் உருவாக்கப்படும் என்று சீன உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.
உறைவிடங்கள், பொது இடங்கள், சாலைகள் முதலியவற்றின் புதிய கட்டுமானம் மற்றும் சீரமைப்புத் திட்டப் பணிகளில், தடையற்ற வசதிகளின் கட்டுமானம், முக்கிய பகுதி கட்டுமானத்துடன் இணைந்து நடைபெறுவதை உள்ளாட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
படம்:VCG