டிராகன் படகு திருவிழாவின் நுகர்வு நிதானமாக இருந்தது

சீன வணிக துறை அமைக்கம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 20ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டில் பழைய நுகர்வுப் பொருட்களுடன் புதியவற்றை வாங்கும் பரிவத்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் சுமார் 13 கோடியே 6 இலட்சம் மக்களுக்கு நன்மை அளித்ததோடு, சுமார் ஒரு இலட்சம்  கோடி யுவான் மதிப்புள்ள விற்பனை தொகையையும் ஈட்டியுள்ளது. இதில் வாகனங்கள் மாற்றீடு செய்வதில் மூலம் 55 ஆயிரத்து 524 கோடி யுவான் மதிப்புள்ள விற்பனை தொகை ஈட்டப்பட்டுள்ளது. தவிரவும், இந்நடவடிக்கையின் மூலம் வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனம், டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொகை 45 ஆயிரத்து 163 கோடி யுவான் ஈட்டப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு பிரதேசச் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் வினியோகமும் விலையும் நிதானமாக உள்ளன.

டிராகன் படகு திருவிழாவின் போது, தானியம், எண்ணெய், இறைச்சி மற்றும் காய்கறியின் விலை, விழாவுக்கு முந்திய நாளில் இருந்ததற்குச் சமம்.

You May Also Like

More From Author