நேபாளத்தில் நடைபெற்ற சீன மொழிப் பயிற்சி வகுப்பின் நிறைவில், மொத்தம் 47 நேபாள சுற்றுலாத் துறை வல்லுநர்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம், நேபாள சுற்றுலா வாரியம், நேபாள-சீன கலாச்சார மற்றும் கல்வி மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆறு மாத சீன மொழிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நேபாளத்தில் உள்ள சீன தூதரகத்தின் அதிகார் ஷோ பான் கூறும்போது, இந்த ஆண்டு சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இது “2025 நேபாள சுற்றுலா ஆண்டு” உடன் ஒத்துப்போகிறது. மேலும் நேபாளத்தின் 10 ஆண்டு சுற்றுலாத் திட்டத்தில் (2023-2032) இது ஒரு முக்கியமான ஆண்டாகும் என்று கூறினார். மேலும் “நாகரிகத்தைப் பரப்புவதற்கும், கலாச்சாரத்தைப் பரிமாறிக்கொள்வதற்கும், நட்புறவை மேம்படுத்துவதற்கும் சுற்றுலாத் துறையும் அதன் பணியாளர்களும் ஒரு பாலமாக செயல்படுகின்றனர் என்று கூறினார். நேபாளத்தின் சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் ராம் கிருஷ்ண லாமிச்சானே கூறுகையில், நேபாளத்திற்கு வருகை தரும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்தத் திட்டம் நேபாளத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார்.
