சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ,ஆப்பிரிக்க ஒன்றியம், எத்தியோப்பியா, தான்சானியா, லெசோத்தோ ஆகியவற்றில் பயணம் மேற்கொண்டிருந்த பயணம் முடிந்த பிறகு, சீன ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில்,
தற்போதைய அறைகூவல்களை சீனாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் கூட்டாகச் சமாளித்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றன. சீன-ஆப்பிரிக்க நெடுநோக்குப் பேச்சுவார்த்தையின் மதிப்பு மற்றும் முக்கிய அர்த்தமாக இது விளங்குகிறது.
சீன-ஆப்பிரிக்க மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு எனும் நடவடிக்கை, சீன-ஆப்பிரிக்க மக்களின் விழாவாகவும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புச் சாதனைகளாகவும் விளங்குகிறது. 600 தொடர்புடைய நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம், இளைஞர்கள், பண்பாடு மற்றும் செய்தி ஊடகத் துறையினர்களும் சீன-ஆப்பிரிக்க தொடர்பு கொண்ட பல்வேறு துறையினரும் இங்கு கூடி கருத்துக்களைப் பரிமாறிகொள்வர்.
உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான விசைப்பொறியான சீனா, ஆப்பிரிக்காவின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிக்க விரும்புகிறது. சீனா பெற்றுள்ள வளர்ச்சி சாதனைகளை ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர். சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம், ஆப்பிரிக்காவுக்கு நன்மை கொண்டு வர அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.
