கம்போடிய மன்னருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

கம்போடிய மன்னராக பதவியேற்ற 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹமோனிக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 29ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கம்போடிய அமைதி, நிதானம், வளர்ச்சி, சர்வதேசப் பரிமாற்றம் ஆகியவற்றில் சிஹமோனி முக்கிய பங்காற்றியுள்ளார். சீனாவும் கம்போடியாவும் நெருக்கமான நண்பர்களாகும்.

இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, கம்போடிய அரச குடும்பத்துடனான பாரம்பரிய நட்பை மதிக்கிறேன் என்றார். சிஹமோனியுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டு உறவை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்குமிடையிலான பொது எதிர்காலச் சமூகம் அதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author