“டாஸ்மாக் கடையில ‘கட்சி நிதி’னு சொல்லி அடிச்ச கொள்ளைப் பணத்தை எல்லாம் இப்ப அரசு கஜானாவில சேர்த்துட்டு வர்றோம்.!” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காரசார பேச்சு..!! 

Estimated read time 0 min read

இத்தனை காலமா டாஸ்மாக் கடையில ‘கட்சி நிதி’ அப்படின்னு சொல்லி மக்கள் பணத்தை அடிச்ச கொள்ளையை எல்லாம் நாங்க இப்ப மொத்தமாப் புடிச்சு அரசு கஜானாவில சேர்த்துக்கிட்டு வர்றோம் ; இனிமே ஒரு பைசா கூட யார் கைக்கு போகாது!”

என்று தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடந்த கால ஊழல்களைப் பட்டியலிட்டு ஆக்ரோஷமாக முழங்கியிருப்பது கோட்டை வட்டாரத்தை அடியோடு குலுக்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிரடிப் பதிலுரை வழங்கிப் பேசிய அவர், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவி வந்த விசித்திர முறைகேடுகளைத் தவெக அரசு ஒடுக்கியுள்ளதாக மார்தட்டியுள்ளார்;

முந்தைய ஆளுங்கட்சியினர் மதுபானக் கடைகள் மூலம் தங்களது சொந்தக் கல்லாவை நிரப்பியதை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்து முதலமைச்சர் விஜய் பேச்சு, அறிவாலயப் பாசறையை நிலைகுலைய வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆதாரம் இல்லாமல் பேச வேன்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

You May Also Like

More From Author