138வது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் குவாங் ச்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் நாள் வரை, 1.57 இலட்சம் அன்னிய கொள்வனவு வணிகர்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்து, சீனாவின் எல்லை நுழைவு நுகர்வுக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளனர். குவாங் ச்சோ நகரின் சுங்கத் துறையின் கணக்கெடுப்பின்படி, அக்டோபர் முதல் நாள் முதல் 10ம் நாள் வரை, குவாங் ச்சோ நுழைவாயிலில் விண்ணப்பிக்கப்பட்ட வரி திருப்பிக் கொடுக்கும் தொகை, 2.7 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 120 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றின் புதிய பதிவை உருவாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் முதல், குவாங் ச்சோ நகரின் பை யுன் விமான நுழைவாயிலில் எல்லை தாண்டிய பயணிகளின் எண்ணிக்கை 9.6 இலட்சத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகரித்தது. இதன் விளைவாக, சீனாவில் வரியை திரும்ப பெறும் அலுவல்கள் அதிகரித்து வருகிறது என்றும் குவாங் ச்சோ சுங்கத் துறை தெரிவித்தது.
படம்: VCG
