தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை காணப்படும்.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவானது.
அதன் பின்னர் சோலையார் பகுதியில் 5 செ.மீ., உபாசி மற்றும் வால்பாறையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
