யுனெஸ்கோ பொது இயக்குநர் எனானியின் சிறப்பு பேட்டி

Estimated read time 0 min read

அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் நாள், தனது முதன்முறை சீனப் பயணத்தை எனானி தொடங்கினார்.

இது குறித்து சீன ஊடக குழுமத்துக்கு சிறப்பு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், ஹாங்சோ, பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் பயணத்தின் போது, சீனாவின் வளர்ச்சியின் உயிராற்றலை உணர முடிந்தாக தெரிவித்தார். சீனாவுக்கும் யுனெஸ்கோவுக்கும் இடையிலான கூட்டாளியுறவின் வளர்ச்சியில் இப்பயணம் புதிய மைல்கல்லாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மே 12ஆம் நாள் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்குடன் சந்திப்பு நடத்திய போது அவர் கூறுகையில், அனைத்து நாடுகளும் உலக நாகரிகங்களின் பன்முகத்தன்மையை மதித்து, வெவ்வேறு நாகரிகங்களிடையே பரஸ்பர மதிப்பையும் அமைதியான சகவாழ்வையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் பலதரப்புவாதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, யுனெஸ்கோ தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் நான் பெரிதும் பயனடைந்துள்ளேன். யுனெஸ்கோவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு கூட்டாளியுறவை ஆழப்படுத்துவதற்கான எனது உறுதியை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும் எனானி தெரிவித்தார். மரபு செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி உள்ளிட்ட துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்துள்ளதாகவும் எனானி தெரிவித்தார்.

மேலும், சீனாவின் பொருள்சாரா கலாச்சார மரபு செல்வங்களின் வாரிசுகள் பாரம்பரிய கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள பேரார்வம், அவரது மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு அவர் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author