சீனாவில் அன்னிய முதலீடு 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து அதிகரித்து, வலிமையான உயிர் ஆற்றலை வெளிகாட்டியுள்ளது. இது குறித்து சில நாடு கடந்த நிறுவனங்களின் தலைவர்கள் சீன ஊடக குழுமத்திற்கு பேட்டியளித்தனர்.
நெதர்லாந்து ரோயல் பிலிப்ஸ் நிறுவனத்தின் உலக தலைமைச் செயல் அதிகாரி ராய் ஜேக்கப்ஸ் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், நமது நிறுவனம் பெய்ஜிங் மாநகரில் புத்தாக்க மையம் ஒன்றை கட்டியமைக்கத் திட்டமிட்டுள்ளது.
பெய்ஜிங் மாநகரில் இத் திட்டம், பிலிப்ஸ் நிறுவனத்தின் முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாகும் என்றார்.
