‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் இது தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Estimated read time 1 min read

கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 173வது படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. கடந்த வருடம் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக நவம்பர் 6ம் தேதி இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

இதனிடையே, இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக ஒரு செய்தி பரவியுள்ளது. “ஓ மை கடவுளே, டிராகன்” ஆகிய படங்களை இதற்கு முன்பு இவர் இயக்கியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு (Title) இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இப்படத்திற்கு ‘தர்மன்’ (Dharman) என்று அதிரடியான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இத்திரைப்படத்தை இயக்குகிறார். சுந்தர் சி, சிபி சக்கரவர்த்தி எனப் பல இயக்குநர்கள் மாற்றங்களுக்குப் பிறகு, அஸ்வத் மாரிமுத்துவின் புதிய திரைக்கதைக்கு ரஜினி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக ஏழைகளுக்கு மிகக் குறைந்த செலவில் மருத்துவ உதவி செய்யும் ஒரு உன்னதமான ‘மருத்துவர்’ (Doctor) கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author