சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்தில், அவருக்கு மகனாக நடிக்க மலையாள நடிகர் பசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த பிரம்மாண்டமான படைப்பை தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக அல்லது ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
‘டான்’ படத்திற்கு பிறகு சிபி சக்ரவர்த்தியுடன் பிரியங்கா இணையும் இரண்டாவது படமாக இது அமையலாம்.
‘தலைவர் 173’ அப்டேட்: ரஜினிகாந்தின் மகனாக பசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம்?
