மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Estimated read time 0 min read

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தானேவிலும் மழை வெளுத்து வாங்கி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே மும்பையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author