கழகம் சும்மா இருக்காது! முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராகப் பாய்ந்த உதயநிதி ஸ்டாலின்!

Estimated read time 1 min read

சென்னையில் நடைபெற்ற “ஜென் இசட் திமுக” (Gen Z DMK) இளம் தலைமுறையினரின் பிரம்மாண்ட மாநாட்டில் தவெக அரசை மிக ஆக்ரோஷமாகச் சாடிப் பேசிய திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவரை, நள்ளிரவில் காவல்துறையினர் அவரது இல்லத்திற்கே சென்று கைது செய்ய முயன்ற சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சென்னையில் புதிய தலைமுறையினரை அரசியல்மயமாக்கும் நோக்கில் ‘Gen Z DMK’ என்ற பெயரில் ஒரு முக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த மேடையில் ஏறிப் பேசிய திமுக இளம் சமூக வலைத்தள நிர்வாகி ஒருவர், தற்போதைய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், முதலமைச்சர் விஜய்யின் சினிமாத்தனமான நிர்வாகப் போக்கு மற்றும் சட்டமன்ற உத்திகள் குறித்து மிகக் கடுமையான வார்த்தைகளால் ‘பஞ்ச்’ டயலாக் பேசி விமர்சித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் திமுகவினர் மத்தியில் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேடையில் முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற தவெக தகவல் தொழில்நுட்ப அணியினரின் ரகசியப் புகாரின் பேரில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அந்த இளைஞரின் வீட்டிற்கு அதிரடியாகச் சென்றனர். எவ்வித முன்அறிவிப்போ அல்லது முறையான வாரண்டோ இல்லாமல் நள்ளிரவில் வாலிபரைக் கைது செய்ய முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும், தகவலறிந்து அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான திமுக பகுதி மற்றும் வாலிபர் அணியினரும் காவல்துறையினரின் வாகனங்களை முற்றுகையிட்டு விடிய விடிய ஆக்ரோஷமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து, கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.

You May Also Like

More From Author