தமிழ் திரைப்பட நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்ததுடன், “ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி… என்றென்றும், எப்போதும்” என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மணமகன் கெளதம் ஜார்ஜ் தமிழ்த்திரையுலகில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
விஜய் சேதுபதி நடித்த ‘அனபெல் சேதுபதி’ மற்றும் பாவனா நடித்த ‘தி டோர்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, அவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
‘பென்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரை கரம் பிடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்!
