சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 14ஆவதுசீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்மக்கள் மாமண்டபத்தில் நிறைவுப் பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் சீன மத்திய இராணுவக் கமிட்டி தலைவருமான ஷிச்சின்பிங் நிறைவுவிழாவில் முக்கிய உரைநிகழ்த்தினார்.
மக்களின் நம்பிக்கையே முன்னேறிச் செல்வதற்கான மிகப் பெரிய உள்ளாற்றல் என்றும், தனக்கு கனமான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டு அனைத்து தேசிய மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்றும், பன்னோக்க தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அமைப்புமுறையைச் சீராக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஷி ச்சன்பிங் மேலும் பேசுகையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பன்னோக்க தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அமைப்புமுறையைச் சீராக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உயர் தரமான வெளிநாட்டுத் திறப்பைப் பயனுள்ள முறையில் முன்னேற்றி, உலகச் சந்தை மற்றும் மூலவளங்கள் மூலம் நாட்டின் ஆற்றலை வலுப்படுத்தும் அதேவேளையில், பன்னாடுகளின் பொது வளர்ச்சியை விரைவுப்படுத்தச் சீனா பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, கட்சியைக் கண்டிப்பான முறையிலும் பன்முகங்களிலும் ஒழுங்கு செய்து, ஊழல் ஒழிப்பில் சமரசமின்றி ஈடுபட வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.